கட்டுக்கடங்க மாட்டோம்
காளைகள் நாம் என்று சிலர்
மொட்டவிழ்த்த புன்சிரிப்பும்
மோகனமும் பெண்டிர் சில
பெட்டையும் பெடியனும்
பெற்றவர்க்கு தெரியாமல்
ஒட்டி உறவாடி ஓடிப்போக றெடி சிலர்
தொட்டில் பழக்கமே தொடரட்டுமென்று சிலர்
கெட்டி மேளங்கொட்ட வருவாளா மாட்டாளா
குட்டி நினைப்பிலேயே குடியிருப்போர் பலர்
நொட்டைக் கடியர் சிலர்
முட்டை முழியர் சிலர்
கட்டை சிலர் நெட்டை சிலர்
பட்டப்படிப்பக்காய் பலகாலம் தவமிருந்து
கட்டுப்புத்தகமும் கையுமாய் திரியுமிவ்
விட்டில் பூச்சியெல்லாம் விழாவெடுத்து
கட்டுப்பத்தையெனும் தெருவிளக்கில் சங்கமம்
-கு.மணி-
மட்டம் 04
பொறியியல் பீடம்
Thursday, October 9, 2008
சங்கமம்...
புத்தகச் சுமை தாங்கி தாங்கி
புன்னகைக்க மறந்த இதயங்கள்
கூடித் தரும் புதிய பரவசம்...
அது சங்கமம்...
பேனை பிடித்துப் பிடித்து
மரத்துப்போன எம் கைவிரல்கள்
படைக்கும் இன்னுமோர் பிரவசம்...
அது சங்கமம்...
புதிதாய் கிடைத்து விட்ட உறவுகளின்
படைக்கத் துடிக்கும் இதயங்களின்
புத்தம் புதிய படைப்புக்கள்...
அது சங்கமம்...
நிலவையும் தாண்டி நீண்டு செல்லும்
நெடிய தமிழ் கொண்டு
நடை போடும் புதுப்பயணம்...
அது சங்கமம்...
இரத்தமும் சதையும் நித்தம் நித்தம்
பார்த்து சலித்துப்போன
எம் மனங்களின் ஒரே சந்தோசம்...
அது சங்கமம்..
-எஸ்.சங்கர்-
மட்டம் 04
பொறியியல் பீடம்
புன்னகைக்க மறந்த இதயங்கள்
கூடித் தரும் புதிய பரவசம்...
அது சங்கமம்...
பேனை பிடித்துப் பிடித்து
மரத்துப்போன எம் கைவிரல்கள்
படைக்கும் இன்னுமோர் பிரவசம்...
அது சங்கமம்...
புதிதாய் கிடைத்து விட்ட உறவுகளின்
படைக்கத் துடிக்கும் இதயங்களின்
புத்தம் புதிய படைப்புக்கள்...
அது சங்கமம்...
நிலவையும் தாண்டி நீண்டு செல்லும்
நெடிய தமிழ் கொண்டு
நடை போடும் புதுப்பயணம்...
அது சங்கமம்...
இரத்தமும் சதையும் நித்தம் நித்தம்
பார்த்து சலித்துப்போன
எம் மனங்களின் ஒரே சந்தோசம்...
அது சங்கமம்..
-எஸ்.சங்கர்-
மட்டம் 04
பொறியியல் பீடம்
Subscribe to:
Posts (Atom)