கட்டுக்கடங்க மாட்டோம்
காளைகள் நாம் என்று சிலர்
மொட்டவிழ்த்த புன்சிரிப்பும்
மோகனமும் பெண்டிர் சில
பெட்டையும் பெடியனும்
பெற்றவர்க்கு தெரியாமல்
ஒட்டி உறவாடி ஓடிப்போக றெடி சிலர்
தொட்டில் பழக்கமே தொடரட்டுமென்று சிலர்
கெட்டி மேளங்கொட்ட வருவாளா மாட்டாளா
குட்டி நினைப்பிலேயே குடியிருப்போர் பலர்
நொட்டைக் கடியர் சிலர்
முட்டை முழியர் சிலர்
கட்டை சிலர் நெட்டை சிலர்
பட்டப்படிப்பக்காய் பலகாலம் தவமிருந்து
கட்டுப்புத்தகமும் கையுமாய் திரியுமிவ்
விட்டில் பூச்சியெல்லாம் விழாவெடுத்து
கட்டுப்பத்தையெனும் தெருவிளக்கில் சங்கமம்
-கு.மணி-
மட்டம் 04
பொறியியல் பீடம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நான் நினைக்கிறேன். இது நல்ல முயற்சி. எல்லா சங்கமத்தின் ஆக்கங்களை இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
Post a Comment